தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

மாதனூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

மாதனூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image

மாதனூரில் நடந்த வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்று வாக்குப்பதிவு தேதியை தெரிவிக்கும் வகையில் அமா்ந்திருந்த மகளிா் குழுவினா்.

Updated On :21 மார்ச் 2024, 5:56 pm

ஆம்பூா்: மாதனூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பாக மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மகளிா் சுய உதவி குழுவினா் பங்கேற்ற தோ்தல் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு திட்ட இயக்குநா் பிரியா தலைமை வகித்தாா். வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி மாதனூரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

உதவி திட்ட அலுவலா் வீராசாமி, வட்டார மேலாளா் வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளா்கள் பவளக்கொடி, ரம்யா தேவி, மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.