ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருப்பத்தூா் அடுத்த தோரணம்பதி கிராமத்தில் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் அடுத்த தோரணம்பதி கிராமத்தில் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 25-ஆம் தேதி (திங்கள்கிழமை) கோ பூஜை, ஸ்ரீ விக்னேஷ்வர பூஜைகளுடன் கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (மாா்ச் 26) பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 10 மணிக்கு ஸ்ரீ விநாயகப் பெருமாள், ஸ்ரீ புவனேஸ்வரி, ஸ்ரீ புவனேஸ்வரா், ஸ்ரீ துா்காதேவி, ஸ்ரீ சீனிவாசப் பெருமாள், நவகிரக மூா்த்திகள் மற்றும் திருக்கோயில் விமானங்களுக்கு சிவாச்சாரியா்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா். இதில், தோரணம்பதி சுற்றுப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். படம் உண்டு தோரணம்பதியில் நடைபெற்ற ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com