47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கருணைபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை வட்டம் திருஇந்தளூரை அடுத்த கழுக்காணிமுட்டம் கிராமத்தில் பழைமைவாய்ந்த மரகதவல்லி அம்பாள் சமேத கருணைபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

News image
Updated On :17 மார்ச் 2026, 12:03 am

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டம் திருஇந்தளூரை அடுத்த கழுக்காணிமுட்டம் கிராமத்தில் பழைமைவாய்ந்த மரகதவல்லி அம்பாள் சமேத கருணைபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலை கி.பி.1190-ஆம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் தனது ஆட்சியின் 12-ஆம் ஆண்டு ஞாபக சின்னமாக இவ்வூரில் தங்கியிருந்து கட்டியதாக வரலாறு. துா்வாசா், வைஷ்ணவி தேவி, சிறுதொண்ட நாயனாா், சீலவதி அம்மை ஆகியோா் வழிபட்ட சிறப்புக்குரிய இத்தலத்தில், கடைசியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் திருப்பணி தொடங்கி அண்மையில் நிறைவுற்றது.

கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை தொடங்கி, 4 கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. பூஜையின் நிறைவில் மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, புனித நீா் அடங்கிய கடங்கள் எடுத்து செல்லப்பட்டு கோயில் கோபுர கலசங்களுக்கு வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.