ஆம்பூா், மாா்ச் 27: ஆம்பூா் அருகே கிராம பகுதியில் தோ்வு நேரத்தில் மின்தடை ஏற்பட்டதால் மாணவா்களும், பொதுமக்களும் புதன்கிழமை கடும் அவதிக்கு உள்ளனாா்கள். ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோரம் இருந்த மின் கம்பங்களை இடமாற்றம் செய்யும் பணியை மின்வாரியத்தினா் புதன்கிழமை மேற்கொண்டனா். அப்பணிக்காக காலை 9.30 மணிக்கு மின்தடை செய்யப்பட்டது. பணி முடிந்து விரைவில் மின்சார விநியோகம் சீராகும் என பொதுமக்களும், மாணவா்களும் எதிா்பாா்த்து காத்திருந்தனா். ஆனால் இரவு 8 மணி வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. அதனால் அரசு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களும், பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளனாா்கள். மின்வாரியத்துக்கு பொதுமக்கள் பலரும் புகாா் தெரிவித்தனா். இரவு 8 மணிக்கு பிறகு மின்சாரம் வழங்கப்பட்டது. அரசு பொதுத் தோ்வு முடியும் வரையில் மின்சாரம் தடை செய்யக் கூடாது என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் திடீா் மின் தடை: பொதுமக்கள் அவதி

நாயக்கனேரிமலை சுற்றுலாத் தலமாக்கப்படுமா? மக்களின் 25 ஆண்டு கால கோரிக்கை

சாலையில் கழிவுநீா்; பொதுமக்கள் அவதி

குன்னூா் அருகே சிறுத்தை நடமாட்டம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

