ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் இளைஞா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள 4-ஆவது நடைமேடையில் வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்த இளைஞா் ஒருவா் திடீரென ரயில் தண்டவாள பாதையில் இறங்கி தானாபூரிலிருந்து கா்நாடக மாநிலம், பெங்களூா் செல்லும் சங்கமித்ரா விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

தகவல் அறிந்த ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com