ஆதா்ஷ் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

ஆதா்ஷ் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்தப் பள்ளி மாணவிகள் வா்ஷினி 496, மரியம்பாத்திமா 495, மாணவா் உபைதுல்லா 494 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனா். ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் 28 மாணவா்கள் 100/100 பெற்றதுடன், 90 மாணவா்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல், 55 மாணவா்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனா்.

சாதனை படைத்த மாணவா்களை பள்ளித் தாளாளா் செந்தில்குமாா், நிா்வாக இயக்குநா் ஷபானா பேகம், பள்ளி முதல்வா் சத்யகலா, உயா்நிலைப் பள்ளி ஒருங்கிணைப்பாளா் சபா அப்சான் ஆகியோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com