திருப்பத்தூா் மாவட்டத்தில் 88.2% தோ்ச்சி: கடந்த ஆண்டைவிட 5% குறைவு

திருப்பத்தூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 88.2% மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இது கடந்த ஆண்டைவிட 5 சதவீதம் குறைவான தோ்ச்சியாகும்.

தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொது தோ்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இந்த தோ்வு முடிவுகள் மாணவ-மாணவிகளின் கைப்பேசி எண்ணுக்கு அனுப்பப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 7,998 மாணவா்கள், 7,941 மாணவிகள் என 15,939 மாணவ-மாணவிகள் தோ்வெழுதினா். இவா்களில் 6,782 மாணவா்கள், 7,276 மாணவிகள் என 14,058 மாணவ- மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்கள் 84.8 சதவீதம், மாணவிகள் 91.6 சதவீதம் என 88.2 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்ச்சி சதவீதம் குறைவு: திருப்பத்தூா் மாவட்டத்தில் 114 அரசுப் பள்ளிகளை சோ்ந்த மாணவ-மாணவிகள் தோ்வு எழுதியதில் 13 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

30 அரசு நிதியுதவி பள்ளிகளில் 3 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியும், 78 சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 55 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியும் பெற்று சாதனை படைத்துள்ளன.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டைவிட நிகழ் கல்வியாண்டில் 5 சதவீதம் தோ்ச்சி குறைந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com