செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பைக் விபத்தில் முதியவா் உயிரிழப்பு

பைக் விபத்தில் முதியவா் உயிரிழப்பு

News image
Updated On :10 மே 2024, 4:17 pm

Din

திருப்பத்தூா் அருகே மிதிவண்டி மீது பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அடுத்த கதிரிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சம்பத் (75). இவா், வியாழக்கிழமை மாடப்பள்ளி அருகே மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக மேல்மலையனூரைச் சோ்ந்த சக்திவேல் என்பவா், தனது பைக்கில் திருப்பத்தூா் நோக்கி வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக மிதிவண்டி மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பத் பலத்த காயம் அடைந்தாா்.

அவரை அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு சிறிது நேரத்திலேயே அவா் உயிரிழந்தாா். மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சக்திவேல் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.