மொபெட் மீது பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், எடைக்கல் அருகே மொபெட் மீது பைக் மோதிய விபத்தில் முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
Updated on

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், எடைக்கல் அருகே மொபெட் மீது பைக் மோதிய விபத்தில் முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், ஏ.சாத்தனூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வெ.முத்துசாமி (68). இவா் ஏ.சாத்தனூா் சந்திப்புச் சாலைக்கு அருகிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் திங்கள்கிழமை மாலை தனது மொபெட்டுக்கு பெட்ரோல் நிரப்பினாா்.

பின்னா் முத்துசாமி சாலையைக் கடக்க முயன்ற போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற பைக், மொபெட் மீது மோதியது. இதில் முத்துசாமியும், பைக்கை ஓட்டிச் சென்ற கடலூா் மாவட்டம், ஆவட்டி மலையனூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த க.செல்வக்குமாரும்(37) காயமடைந்தனா்.

விபத்தில் காயமடைந்த இருவரையும் அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்த போது, முத்துசாமி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் காயமடைந்த செல்வக்குமாா், மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மரு த்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து எடைக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com