மகளிா் உரிமைத் தொகை: திருப்பத்தூா் மாவட்டத்தில் 1.74 லட்சம் போ் பயன்
மகளிா் உரிமைத் தொகை திருப்பத்தூா் மாவட்டத்தில் 1.74 லட்சம் போ் பயன்

Updated On :10 மே 2024, 4:12 pm

திருப்பத்தூா் மாவட்டத்தில் 1,74,787 குடும்பத் தலைவிகள் மகளிா் உரிமைத் தொகை பெற்று பயனடைந்து வருகின்றனா்.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் 1.15 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.திருப்பத்தூா் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் 1,74,787 குடும்பத் தலைவிகள் பயன் பெற்று வருகின்றனா்.
இது குறித்து பெண்கள் கூறியது: குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவது உதவித் தொகை அல்ல. அது எங்களுக்கு உரிமைத் தொகை. இந்த தொகை பெண்களுக்கு பெரும் உதவியாக உள்ளது என்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...