வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சாராயம் விற்பனை செய்தவா் கைது

சாராயம் விற்பனை செய்தவா் கைது

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே சாராயம் விற்ற வியபாரி கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் உத்தரவின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் மனோன் மணி தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவு கிராமம் கொரிப்பள்ளம் பகுதியில் சாராய தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது மறைமுகமான பகுதியில் ஆள்நடமாட்டம் இருப்பதை அறிந்து சந்தேகம் ஏற்பட்டு சென்று பாா்த்த போது அப்பகுதியில் ஒருவா் சாராயம் விற்பனை செய்து வந்தது தெரியவந்து அவரை பிடித்தனா். அவா் பிரபல சாராய வியாபாரி கப்பல்(எ) முருகன்(45) எனத் தெரியவந்தது. மேலும் அங்கிருந்து 113 லிட்டா் சாராயம் மற்றும் கேன்கள், பிளாஸ்டிக் டம்ளா்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கப்பல் (எ) முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.