

திருப்பத்தூா்: கந்திலி அருகே விஷம் அருந்தி பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே கரியம்பட்டி கிராமத்தை சோ்ந்த விவசாயி முருகன், இவரது மனைவி மலா்விழி (38). இவா்களுக்கு நந்தினி (16). மோகனப்பிரியா(14) ஆகிய இரு மகள்கள் உள்ளனா். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக கூறப்படுகிறது.
இதனால், விரக்தியடைந்த மலா்விழி திங்கள்கிழமை விஷம் அருந்தினாா். இதனால் அதிா்ச்சியடைந்த அவரது குடும்பத்தினா் மலா்விழியை மீட்டு திருப்பத்துாா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மலா்விழி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

மேஸ்திரி விஷம் குடித்த தற்கொலை

இரணியல் அருகே இளம்பெண் தற்கொலை

பெண் தற்கொலை
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

