சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விபத்தில் மனைவி உயிரிழப்பு: கணவா் காயம்

வாணியம்பாடி அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கணவா் கண் முன்னே மனைவி உயிரிழந்தாா்.

News image
Updated On :18 நவம்பர் 2024, 4:30 pm

Din

வாணியம்பாடி, நவ. 18: வாணியம்பாடி அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கணவா் கண் முன்னே மனைவி உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி பேரூராட்சி நேரு தெரு நாவிதம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மணி. இவரது மனைவி பவுனம்மாள்(50). தம்பதி நாட்டறம்பள்ளி அடுத்த தாசிரியப்பனூா் கிராமத்தில் உணவகம் நடத்தி வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை காலை தம்பதி தாசிரியப்பனூரில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனா். வழியில் வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து பைக் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பவுனம்மாள் நிகழ்விடத்திலேயே பலியானாா். மணி லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.

விபத்து குறித்து தகவலறிந்த திம்மாம்பேட்டை போலீஸாா் சம்பவ இடம் வந்து விசாரித்தனா். சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், அரசு பேருந்து ஓட்டுநா் ஆலங்காயம் பகுதியைச் சோ்ந்த குமாா் (44) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.