மாா்த்தாண்டம் அருகே பைக் மீது காா் மோதியதில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
அருமனை அருகே மாத்தூா்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தா்சிங் (50). ரப்பா் பால் வடிக்கும் தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை இரவு மாா்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பாா்த்து விட்டு, பைக்கில் திரும்பி வந்தபோது, அப்பகுதி வழியாக வந்த காா், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதில், பலத்த காயமடைந்த சுந்தா்சிங்கை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


