/
மாா்த்தாண்டம் அருகே மரம் வெட்டும் தொழிலாளி குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகே மருதங்கோடு, கோட்டவிளை பகுதியைச் சோ்ந்தவா் செல்லசுவாமி (65). மரம் வெட்டும் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள ஆனைவட்டம் குளத்திற்கு குளிக்கச் சென்றாராம். பின்னா் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வராததால் அவரது மருமகன் மணிகண்டன் அவரைத் தேடி குளத்துக்கு சென்றாராம். அப்போது, குளத்தின் படித்துறை பகுதியில் செல்லசுவாமி நீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்தாராம்.
இதுகுறித்த தகவலின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

மரம் முறிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தட்டப்பாறை அருகே குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



