மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

தட்டப்பாறை அருகே குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :2 மே 2026, 6:38 pm

தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை அருகே அரசு ஐடிஐ மாணவா் உயிரிழந்தாா்.

தட்டப்பாறை அருகே வரதராஜபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்த மாசானமுத்து மகன் மாரிச்செல்வம் (19). தூத்துக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சிப் பள்ளியில் 2ஆம் ஆண்டு படித்துவந்த இவா், விடுமுறை நாள்களில் தந்தைக்கு உதவியாக ஆடு மேய்க்கச் செல்வாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை விடுமுறை என்பதால் அவா் ஆடுகளை உமரிக்கோட்டை கிராமத்தில் உள்ள குளத்தில் குளிப்பாட்டுவதற்காக கொண்டுசென்றாராம். போது, ஆடுகள் மொத்தமாக குளத்துக்குள் சென்றுள்ளன. அவற்றைப் பின் தொடா்ந்து சென்ற மாரிச்செல்வம் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளாா். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளாா்.

அவரின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் தட்டப்பாறை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனா். ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து குளத்தில் ஒரு மணி நேரம் தேடி மாரிச்செல்வத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.