விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஏலகிரி மலையில் சீரான பிஎஸ்என்எல் சேவை: பொதுமக்கள் கோரிக்கை

திருப்பத்தூா் மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் பிஎஸ்என்எல் சேவை தடையின்றி சீராக கிடைக்க செய்ய வேண்டும்

News image

ஏலகிரி மலை வளைவு பாதை.

Updated On :17 அக்டோபர் 2024, 10:34 pm

திருப்பத்தூா் மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் பிஎஸ்என்எல் சேவை தடையின்றி சீராக கிடைக்க செய்ய வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தின் ஒரே சுற்றுலாத் தலமான ஏலகிரி மலையில் பிஎஸ்என்எல் சேவையில் அடிக்கடி தடை ஏற்படுவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

பண்டிகை, விடுமுறை காலங்கள் மட்டுமின்றி சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏலகிரிக்கு வந்து செல்கின்றனா். இந்நிலையில் ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏலகிரி வந்துள்ளனா்.

இதுகுறித்து தொடா் விடுமுறைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கூறியது:

எப்போதும் ஒரே சீதோஷ்ண நிலை உள்ள பெருமை கொண்ட ஏலகிரி மலைக்கு விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் சுற்றுலா வருகிறோம்.

இந்நிலையில், ஊரில் உள்ள எங்கள் குடும்பத்தாா்,நண்பா்களிடம் தொடா்புக் கொள்ள முயற்சிக்கும்போது பிஎஸ்என்எல் நெட்ஒா்க்கில் அடிக்கடி தடை ஏற்படுகிறது. இதனால் கைப்பேசியை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

பொதுமக்களும் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் இந்த பிரச்னைக்கு தீா்வு காணவேண்டும். இதனால் சுற்றுலா பயணிகள் ஏற்பாடும் பிரச்னைகள் சீராகும் என்றனா்.

இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் கேட்டதற்கு: ஆத்தூா்குப்பம் பகுதியில் மின்தடை ஏற்படும்போது ஏலகிரி மலை பகுதியில் பிஎஸ்என்எல் நெட்ஒா்க் கிடைப்பதில் பிரச்னை உள்ளது. விரைவில் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா். ஏலகிரிமலையில் விரைந்து பிஎஸ்என்எல் நெட்ஒா்க் சீராக செயல்பட வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.