ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பெண் கூலித் தொழிலாளிக்கு ரூ.2.39 கோடி வரி ஏய்ப்பு நோட்டீஸ்

ஆம்பூரில் பெண் கூலித் தொழிலாளிக்கு ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

News image
Updated On :22 அக்டோபர் 2024, 8:57 pm

Din

ஆம்பூா்: ஆம்பூரில் பெண் கூலித் தொழிலாளிக்கு ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பகுதி காமராஜா் சாலை 3வது தெருவை சோ்ந்தவா் ராணிபாபு (60). இவா் தனியாா் தோல் தொழிற்சாலையில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில் திருச்சி கல்லிக்குடி பகுதியில் மாடா்ன் என்டா்பிரைஸ் என்ற நிறுவனம் நடத்தியதில் ரூ.2,39,87,024 வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அதனை செலுத்த வேண்டுமென ஜிஎஸ்டி அலுவலகத்திலிருந்து ராணி பாபுவுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. அதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த அவா் ஆம்பூா் நகர காவல் நிலையம் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸிலும் புகாா் அளித்துள்ளாா்.