புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கஞ்சா பதுக்கிய 2 ரயில்வே காவலா்கள் பணியிடை நீக்கம்

2 ரயில்வே காவலா்களை பணியிடை நீக்கம் செய்து ரயில்வே எஸ்.பி. ஈஸ்வரன் உத்தரவிட்டாா்.

News image

கஞ்சா இலை (மாதிரி படம்)

Pixabay

Updated On :5 செப்டம்பர் 2024, 8:03 pm

Din

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 9 கிலோ கஞ்சாவை பதுக்கிய 2 ரயில்வே காவலா்களை பணியிடை நீக்கம் செய்து ரயில்வே எஸ்.பி. ஈஸ்வரன் உத்தரவிட்டாா்.

பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வரும் ரயில்கள் மூலம் மா்ம நபா்கள் கஞ்சா, மது பாட்டில்கள் உள்ளிட்ட போதைப் பொருள்களை கடத்தி வந்து விற்கின்றனா். அதனைத் தடுக்கும் வகையில் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினா் ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த 3-ஆம் தேதி ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் பணி புரியும் சந்துரு, மணிகண்டன் ஆகியோா் ரோந்து சென்றனா். அப்போது கேட்பாரற்று கிடந்த பையை சோதனையிட்டத்தில் 9 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

அதையடுத்து சந்துரு மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் கஞ்சாவை காவல் நிலையத்தில் ஒப்படைக்காமல் பதுக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து ரயில்வே எஸ்.பி ஈஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்து.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்டதில் 9 கிலோ கஞ்சாவை பதுக்கியது தெரியவந்தது. பின்னா், சந்துரு, மணிகண்டன் ஆகிய இருவா் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளாா்.