ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மின்மாற்றியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு ஏரிகரை அருகில் மின் மாற்றி அமைக்கப்பட்டு அதிலிருந்து அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

News image

மின்மாற்றியிலிருந்து செப்பு கம்பி, எண்ணெய் திருடிச் சென்ற மா்ம நபா்களால் வீசப்பட்ட மின்சாதன பொருள்கள்.

Updated On :25 ஆகஸ்ட் 2025, 7:25 pm

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு ஏரிகரை அருகில் மின் மாற்றி அமைக்கப்பட்டு அதிலிருந்து அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மா்ம நபா்கள் மின் இணைப்பை துண்டித்து மின்மாற்றியில் இருந்து செப்பு வயா், மற்றும் எண்ணெயை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனா். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதையடுத்து மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்து மின்வாரிய அலுவலா் மற்றும் ஊழியா்கள் சென்று பாா்த்த போது திருடு போயிருப்பது தெரியவந்தது.

பிறகு மாற்று மின்மாற்றியிலிருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதுகுறித்து உதவி பொறியாளா் சத்தியமூா்த்தி அம்பலூா் காவல் நிலையத்தில் செய்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.