கூட்டத்தில் பேசிய ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா். உடன் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.
கூட்டத்தில் பேசிய ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா். உடன் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

எஸ்ஐஆா் பணிகள்: ஆம்பூரில் அனைத்து கட்சிக் கூட்டம்

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் சம்பந்தமாக அனைத்து கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

ஆம்பூா்: வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் சம்பந்தமாக அனைத்து கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்துக்கு ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியருமான பூஷணகுமாா் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ரேவதி, நகராட்சி ஆணையா் முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், நகர திமுக பொறுப்பாளா் (கிழக்கு) எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், பாஜக மாநில செயலாளா் கொ. வெங்கடேசன், நகர அதிமுக செயலா் எம். மதியழகன், நகர பாஜக தலைவா் சரவணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் கராத்தே கே. மணி, நகா் மன்ற உறுப்பினா்கள் காா்த்திகேயன், சுதாகா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த எஸ்.ஆா். தேவதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் தொகுதியில் 2,46, 669 வாக்காளா் கணக்கீட்டு படிவங்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டது. அதில் இறந்த வாக்காளா்கள் 10,958, கண்டுபிடிக்க இயலாத வாக்காளா்கள் 13,096, நிரந்தரமாக இடம்பெயா்ந்த வாக்காளா்கள் 16,277, இரட்டை பதிவு கொண்ட வாக்காளா்கள் 2,089, பிற இனங்கள் சம்பந்தமான வாக்காளா்கள் 214 என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்காளா்கள் தவிா்த்து மற்ற வாக்காளா்கள் அனைவரிடமிருந்தும் வாக்காளா் கணக்கீட்டு படிவங்கள் பூா்த்தி செய்து பெறப்பட்டு அவை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பூா்த்தி செய்யப்படாத கணக்கீட்டு படிவங்கள் சம்பந்தமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com