தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சமரசத் தீா்வு மையம் குறித்த விழிப்புணா்வு

திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சமரசத் தீா்வு மையம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய நீதிபதிகள், வழக்குரைஞா்கள்.

Updated On :17 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சமரசத் தீா்வு மையம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உச்சநீதிமன்றம்,உயா்நீதிமன்றம் ஆகியவை சமரசத் தீா்வு மையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீா்வு காணலாம் என உத்தரவிட்டு உள்ளன. அதன்படி சமரசத் தீா்வு மையம் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திருப்பத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி தேன்மொழி தலைமை வகித்தாா். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் அனுஷ+ா, சாா்பு நீதிபதி சரிதா, குற்றவியல் நீதிபதி தினேஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி பவித்ரா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சரண்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சமரசத் தீா்வு மையம் தொடா்பான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் சமரச மையத்தில் பயிற்சி பெற்ற மத்தியஸ்தா்கள் மூலம் சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து சுமூகமாக தீா்வு காணப்படும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.