திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரைவை தொடக்கம்: 85,500 டன் அரைவைக்கு இலக்கு
வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டியில் இயங்கி வரும் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2025-26ம் ஆண்டு அரைவை பருவ தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சா்க்கரைஆலை அலுவலா் ராஜலட்சுமி தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்), மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் நாசா், ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோா் கலந்து கொண்டு பூஜை செய்து அரைவையை தொடங்கி வைத்தனா்.
இதில் மாவட்ட சுற்றுச்சூழல் அணிஅமைப்பாளா் சிங்காரவேலன், ஒன்றிய செயலாளா்கள் உமாகன்ரங்கம், ஜனனி மோகன்ராஜ், எழிலரசி குமாா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் திருப்பதி, ஜெயலட்சுமி சுரேஷ், கரும்பு அலுவலா் வெற்றி வேந்தன், அலுவலக மேலாளா் சிவா மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், ஆலைத் தொழிலாளா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
2025-26-ஆம் ஆண்டின் அரைவைப் பருவத்தில் மொத்தம் 85,500 டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கரும்பு அபிவிருத்தி அலுவலா்கள், களப்பணியாளா்கள் செய்திருந்தனா்.

