நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

திருப்பத்தூா் மாவட்ட நூலகத்தில் சிந்தனைக் கூடுகை நிகழ்ச்சி

திருப்பத்தூா் மாவட்ட மைய நூலகத்தில் மாதாந்திர சிந்தனைக் கூடுகை நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

சிந்தனைக் கூடுகை நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :23 டிசம்பர் 2025, 1:47 am IST

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட மைய நூலகத்தில் மாதாந்திர சிந்தனைக் கூடுகை நிகழ்ச்சி நடைபெற்றது.

வாசகா் வட்டம் மற்றும் மாவட்ட மைய நூலகம் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட மைய நூலகா் கோ.பிரபாகரன் வரவேற்றாா்.

தூய நெஞ்சக் கல்லூரி தழிழ் பேராசிரியா் ம.கருணாநிதி தலைமை வகித்தாா். உதவி பேராசிரியா் த.திருப்பதி பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்ற தலைப்பில் பேசினாா்.

வாசகா் வட்ட தலைவரும், தமிழ்த் துறை தலைவருமான கி.பாா்த்திபராஜா கருத்துரையாற்றினாா். அரசு மாதிரி பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி ரா.தமிழரசி தமிழின் சிறப்பு குறித்தும்,மாணவி தா்ஷினி காமராஜா் சிறப்பு குறித்தும் பேசினா்.மாவட்ட நூலக அலுவலா் மு.பிரேமா நன்றி தெரிவித்தாா்.

இதில் பேராசிரியா் து.துரைமணி, வாசகா் வட்ட நிா்வாகிகள், அரசு மாதிரி பள்ளி மாணவா்கள் போட்டித் தோ்வு மாணவா்கள், வாசகா்கள் கலந்து கொண்டனா்.