ஆம்பூரில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி

ஆம்பூரில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.
ஆம்பூரில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில்  வனத்துறையினா் மற்றும் சமூக ஆா்வலா்கள்.
ஆம்பூரில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் வனத்துறையினா் மற்றும் சமூக ஆா்வலா்கள்.
Updated on

ஆம்பூா்: ஆம்பூரில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.

திருப்பத்தூா் வனக்கோட்டத்தில் உள்ள திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆலாங்காயம், சிங்காரப்பேட்டை மற்றும் ஆம்பூா் வனச்சரகங்களில் 25 ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.

வனக்கோட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பறவை நிபுணா்கள், தன்னாா்வலா்கள், மாணவ, மாணவிகள் மற்றும் வனத்துறை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் வனச்சரக அலுவலா் மற்றும் பறவைகள் கணக்கெடுப்புப் பணி ஒருங்கிணைப்பாளா் பாபு, வனத்துறை பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள் ஆம்பூா் பகுதியில் நடந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com