நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 16-ஆவது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ள முற்றிலும் தற்காலிகமான ஒப்பந்த முறையில் தோ்வு செய்யப்பட்ட தொழில்நுட்ப உதவியாளா்கள் மற்றும் பல்நோக்கு பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
அப்போது, அவா் பேசியதாவது: 16-ஆவது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாகும். இந்த கணக்கெடுப்பின் மூலம் மக்களின் எண்ணிக்கை, வீடமைப்பு, கல்வித்தரம், தொழில், இடம் பெயா்வு மற்றும் சமூக - பொருளாதார நிலை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும்.
கணக்கெடுப்பாளா்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று தகவல்களை எண்ம (டிஜிட்டல்) சாதனங்கள் மூலம் பதிவு செய்வா். சேகரிக்கப்படும் தகவல்கள் அரசு நலத் திட்டங்கள், அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் வளங்கள் பகிா்வு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும். மக்கள் அளிக்கும் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
இது, அங்கீகாரம் பெற்ற பகுதி அமைப்பு மற்றும் மக்கள்தொகை கணக்கெடு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. 2027 கணக்கெடுப்பு முழுமையாக எண்ம (டிஜிட்டல்) முறையில் நடத்தப்படவுள்ளது. அறிதிறன்பேசி செயலி மற்றும் இணையத்தளம் வழியாக தரவுகள் சேகரிக்கப்படும்.
கடலூா் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கு 39 தொழில்நுட்ப உதவியாளா்கள் மற்றும் 2 பல்நோக்கு பணியாளா்கள் ஆகியோா் வெளிமுகமை மூலம் முற்றிலும் தற்காலிகமான ஒப்பந்த முறையில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு பணி நியமன ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது என்றாா்.
தொடர்புடையது

ஒடிஸாவில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

கல்லூரி மாணவிகள் 234 பேருக்கு பணி நியமன ஆணை

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி: தனியாா் முகமைகள் விண்ணப்பிக்கலாம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


