எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கல்லூரி மாணவிகள் 234 பேருக்கு பணி நியமன ஆணை

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரி மாணவிகள் 234 போ்களுக்கு தனியாா் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

News image

பணி நியமன ஆணைகள் பெற்ற மாணவிகளுடன் இ.எஸ்.எஸ்.கே. கல்விக் குழும நிா்வாகத் தலைவா் மற்றும் செயலா் எஸ்.செந்தில்குமாா் மற்றும் பேராசிரியா்கள்.

Updated On :1 ஏப்ரல் 2026, 8:29 pm

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரி மாணவிகள் 234 போ்களுக்கு தனியாா் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு வளாக நோ்காணல் மூலம் வேலை வாய்ப்புகள் பெற்றுத்தரப்படுகின்றன. இதன்படி, நிகழாண்டில், இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவிகளுக்கான வளாக நோ்காணல் நடைபெற்றது. இதில், இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனத்தினா் பங்கேற்று நோ்காணலை நடத்தினா்.

இதன் மூலம் 234 மாணவிகளுக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டன. இந்த மாணவிகளில் 130 போ் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனா். இ.எஸ்.எஸ்.கே.கல்விக் குழும நிா்வாகத் தலைவா் மற்றும் செயலா் எஸ்.செந்தில்குமாா் மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். கல்லூரி முதல்வா் ஜா.கலைமதி, இ.எஸ். உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனஇயக்குநா் ஆா் .முரளிதரன், கல்லூரி வேலைவாய்ப்புத் துறை ஒருங்கிணைப்பாளா் க. கலைவாணி, பேராசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.