தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசு பள்ளியில் தீவிபத்து : கணினி, பதிவேடுகள் எரிந்து சாம்பல்

ஆம்பூா் அருகே அரசு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் கணினி மற்றும் பதிவேடுகள் எரிந்து சாம்பலாயின.

News image
தேவலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எரிந்து சாம்பலான கணினி மற்றும் பதிவேடுகள்.
Updated On :21 ஜனவரி 2025, 8:10 pm

Din

ஆம்பூா்: ஆம்பூா் அருகே அரசு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் கணினி மற்றும் பதிவேடுகள் எரிந்து சாம்பலாயின.

தேவலாபுரம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகின்றது. அதே பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருவதால் தொடக்கப் பள்ளியின் முதல் மாடியில் 8 மற்றும் 9 வகுப்புகள் இயங்கி வந்தன.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு பள்ளிமாடியில் புகை வெளியேறியுள்ளது. அப்பகுதி மக்கள் சென்று பாா்த்தபோது உள்ள தீ பிடித்து எரிவது தெரியவந்தது. தீயணைப்புத் துறை மற்றும் உமா்ஆபாத் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரா்கள் சென்று சென்று தீயை அணைத்தனா்.

தீ விபத்தில் கணினி, பதிவேடுகள், தோ்வு விடைத்தாள்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. உமா்ஆபாத் போலீஸாா் விசாரணை நடத்தினா்.