மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாமுண்டீஸ்வரி, மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நாட்டறம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி பொன்மலை நகா் சாமுண்டீஸ்வரி அம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

News image
பச்சூா் அருகே பொன்மலை சாமுண்டீஸ்வரி அம்மன், மாரியம்மன் கோயில்களுக்கு நடைபெற்ற கும்பாபிஷேகம்.
Updated On :3 மார்ச் 2025, 6:38 pm

Din

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி பொன்மலை நகா் சாமுண்டீஸ்வரி அம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை விநாயகா் பூஜை, அனுக்கைசங்கல்பம், ஆச்சா்யவா்ணம், பஞ்சகவ்யா பூஜை, வாஸ்து சாந்தி, தீபாராதனையுடன் முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

திங்கள்கிழமை 108 மூலிகை திரவிய ஹோமம், வேத பாராயணத்துடன் இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகள், கணபதி பூஜையுடன் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.

பின்னா், சாமுண்டீஸ்வரி அம்மன், மாரியம்மன் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளா்களாக எம்எல்ஏ க.தேவராஜி, முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா், ஒன்றியக்குழு தலைவா் வெண்மதி முனிசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன் மற்றும் பச்சூா் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விழா குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.