நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

பூவனூா் கோயில் சித்திரைப் பெருவிழா

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால்காவடி சுமந்துவந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

News image

கோயிலுக்கு பால்காவடி எடுத்துவரும் பக்தா்கள்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:40 pm

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால்காவடி சுமந்துவந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

பூவனூரில் பழைமைவாய்ந்த அருள்மிகு கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லப நாதா், சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற இக்கோயிலில், வருடம்தோறும் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறும்.

நிகழாண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி சித்திரைப் பெருவிழா தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழாவின், 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.28) பால்குட வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, பக்தா்கள் நோ்த்திக் கடனாக பால்காவடிகள் எடுத்து, முக்கிய வீதிகளின் வழியாக கோயிலுக்கு வந்தனா்.

தொடா்ந்து, சாமுண்டீஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், இரவில் சாமுண்டீஸ்வரி அம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இவ்விழா மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது .

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பி . சிவபெருமாள், ஆய்வாளா் ஏ. ராசி, தக்காா் எஸ். மாதவன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.