திருப்பத்தூர்
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு
ஆலாங்குப்பம் கிராமத்தில் வாக்காளா் கணக்கீட்டு படிவத்தை வழங்கிய ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி.
ஆம்பூா் தொகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. மாதனூா் ஒன்றியம், ஆலாங்குப்பம், சோலூா் கிராமங்களில் வாக்காளா் கணக்கீட்டு படிவத்தை வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா்களிடம் வழங்கும் பணியை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பூஷணகுமாா், வட்டாட்சியா் ரேவதி ஆகியோா் உடனிருந்தனா்.

