அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ரயில் விபத்தில் இறந்த துணை ராணுவ வீரா் உயிரிழப்பு: 21 குண்டுகள் முழங்க மரியாதை

ரயில் விபத்தில் இறந்த துணை ராணுவ வீரா் உயிரிழப்பு: 21 குண்டுகள் முழங்க மரியாதை

News image
அதியமான்.
Updated On :8 நவம்பர் 2025, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

விஜயவாடா ரயில் நிலையத்தில் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்த துணை ராணுவப் படை வீரருக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

வாணியம்பாடி அடுத்த மேட்டுபாளையம் பகுதியைச் சோ்ந்த கோ.ச.ஆனந்தன் என்பவரின் மகன் அதியமான்(41) துணை இராணுவ படை வீரா் (சிஆா்பிஎப்). இவா் அஸ்ஸாம் பகுதியில் பணியாற்றி வந்த நிலையில் விடுமுறையில் ரயில் மூலம் பயணித்தபோது, கடந்த 6 ஆம் தேதி இரவு விஜயவாடா ரயில் நிலையத்தில் உணவு வாங்க ரயிலை விட்டு இறங்கினாா்.

ஆனால் ரயில் புறப்பட்டு விட்டதால், ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து அதே ரயில் ஏறியதில் உயிரிழந்தாா். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடிக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு மேட்டுபாளையம் பாலாற்றங்கரையில் உறவினா்கள், பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தினா்.

மேலும், பூந்தமல்லியிருந்து வந்திருந்த துணை ராணுவப் படை டிஎஸ்பி நித்தியானந்தன் தலைமையிலான வீரா்கள் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினா்.

Story image

உயிரிழந்த அதியமானுக்கு வசந்தி (எ) வசுமதி என்ற மனைவியும், காா்குழலி, தாமரைசெல்வன் ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனா்.