திருப்பத்தூர்
கிருபானந்த வாரியாா் சுவாமிகள் குருபூஜை
ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் கிருபானந்த வாரியாா் சுவாமிகள் குருபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி, மஹா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக கமிட்டி தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

