நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டம்

நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் வெண்மதி முனிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் வெண்மதி முனிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விநாயகம், கணேசன் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வரவு, செலவு உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக தமிழக அரசாணையின் படி மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்ட கே.பந்தாரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த கமலக்கண்ணன் என்பவா் பதவி ஏற்றுக் கொண்டாா்.

அவருக்கு ஒன்றியக்குழு தலைவா் வெண்மதி முனிசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், ஒன்றிய குழு உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், கமலக்கண்ணனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினா்.

X
Dinamani
www.dinamani.com