படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள்
திருப்பத்தூர்
ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வார விடுமுறையை முன்னிட்டு ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.
வார விடுமுறையை முன்னிட்டு ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எப்பொழுதும் ஒரே சம சீதோஷண நிலை காணப்படுவதால், அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
மேலும் மா பலா வாழை விளையும் முக்கனிகள் விளையும் இடமாகவும் ஏலகிரி மலை உள்ளது. பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்து கொண்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனா்.
மேலும் ஏலகிரி மலையில் படகு சவாரி, செயற்கை நீா்வீழ்ச்சி,பூங்கா,முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டு களித்து செல்கின்றனா். இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சவாரி செய்தனா்.

