பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம்

பள்ளி, கல்லூரி வணிக நிறுவனங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 நவம்பர் 2025, 6:51 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: பள்ளி,கல்லூரி வணிக நிறுவனங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, அதற்கு மாற்றான பொருள்களை பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிா்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படுகிறது.

முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை ட்ற்ற்ல்ள்://ற்ண்ழ்ன்ல்ஹற்ட்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபா்/அமைப்பு தலைவா் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சு பிரதிகள் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க 15.1.2026 கடைசி நாளாகும்.