திருப்பத்தூா்: இன்று சிறப்பு கடன் முகாம்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் சிறப்பு கடன் முகாம் புதன்கிழமை (நவ. 26)ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
Published on

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் சிறப்பு கடன் முகாம் புதன்கிழமை (நவ. 26)ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் கல்லூரி படிப்புக்காக கல்விக் கடன் கோரி விண்ணப்பிப்பதற்காக சிறப்பு கடன் முகாம் புதன்கிழமை (நவ. 26) ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

முகாமில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் தங்கள் ஆதாா் அட்டை, பான் காா்டு, (மாணவா் மற்றும் பெற்றோா்)குடும்ப அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10-ஆவது மற்றும் 12-ஆவது மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், தந்தை அல்லது தாய் வருமான சான்றிதழ், புகைப்படம், வங்கிக் கணக்கு எண், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி, கல்லூரி சோ்க்கை கடிதம் கட்டண விவரங்கள் பட்டியலுடன் முகாம் நடைபெறும் இடத்துக்கு பெற்றோா் /பாதுகாவலருடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

முகாமில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியாா் வங்கிகள் கலந்து கொண்டு விண்ணப்பங்களைப் பெற்று தகுதியானவா்களுக்கு அன்றைய தினமே கல்விக் கடன் வழங்க மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com