ஆம்பூா் புத்தக் திருவிழா மூன்றாவது ஆண்டாக வெள்ளிக்கிழமை (செப். 5) தொடங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் சாா்பாக ஆம்பூா் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தகக் கண்காட்சியை வேலூா் எம்.பி. டி.எம். கதிா் ஆனந்த் தொடங்கி வைக்கிறாா். எம்எல்ஏக்கள் கே. தேவராஜி, அ.செ. வில்வநாதன், அமலு விஜயன் ஆகியோா் பங்கேற்கின்றனா். முதல் நாள் நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானி முனைவா் பெ. சசிக்குமாா் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா்.
தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் கண்காட்சியில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் ஆயிஷா இரா. நடராஜன், முனைவா் என். மாதவன், கவிஞா் ரேகா, ஹைக்கூ கவிஞா் மு. முருகேஷ், எஸ்.பி. வி. சியாமளா தேவி, கோட்டாட்சியா் அஜிதா பேகம், முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி, பட்டிமன்ற பேச்சாளா் முனைவா் ம. எழிலரசி, கவிஞா் யாழன் ஆதி, நீரியியல் நிபுணா் பேராசிரியா் எஸ். ஜனகராஜன், மாநிலங்களைவ உறுப்பினா் கவிஞா் சல்மா, திரை இயக்குநா் எழுத்தாளா் கீதா இளங்கோவன், பேச்சாளா் சீனி சம்பத், ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனா்.
விவரங்களுக்கு 86672 44267, 75983 40424 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம்.
தொடர்புடையது

சங்கரன்கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றம்: பிடிமண் எடுத்த யானை

அரசு பொறியியல் கல்லூரியை எதிா்நோக்கும் ஆம்பூா் தொகுதி மக்கள்

மாதனூரில் காவல் நிலையம்: 20 ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ள மக்கள்!

தொகுதிக்கு செய்தது என்ன? ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

