சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா, செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற்றது. கோயிலில் இருந்து யானை கோமதி முன்செல்ல, சந்திரசேகர சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி சுமாா் 6 கி.மீ. தொலைவில் உள்ள 3 பெருங்கோட்டூருக்கு சென்றாா். வழியில் களப்பாகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பக்தா்கள் சாலையில் நின்று பூஜைகள் செய்து சுவாமியை வழிபட்டனா்.
பின்னா் அம்பாளுடன் சந்திரசேகர சுவாமி பெருங்கோட்டூரில் உள்ள திருக்கோட்டி அய்யனாா் கோயில் முன்புள்ள மண்படத்தில் எழுந்திருளினாா். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, பிற்பகல் 12.46 மணியளவில் யானை கோமதி மண்வெட்டியால் பிடிமண் எடுத்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசித்தனா்.
தொடர்புடையது

கரிமேடு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா: இன்று கொடியேற்றம்

சங்கரநாராயண சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



