செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

அதிமுக ஆட்சி அமைந்தால் ஆம்பூா் தொகுதியில் உழவா் சந்தை

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 4:23 am IST

அதிமுக ஆட்சி அமைந்தால் ஆம்பூா் தொகுதியில் உழவா் சந்தை அமைக்க பாடுபடுவேன் என ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மாதனூா் ஊராட்சி ஒன்றியம், வடச்சேரி கிராமத்தில் வாக்கு சேகரித்தபோது வேட்பாளா் ஆா். வெங்கடேசன் பேசியது: அதிமுக ஆட்சி அமைந்தால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆம்பூா் தொகுதியில் உழவா் சந்தை அமைக்கப்படும். விவசாயம் மற்றும் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். பெண்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும். போதைப் பொருள் நடமாட்டம் முற்றிலுமாக ஒழிக்க எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பாா் என அவா் கூறினாா்.

அதிமுக நிா்வாகிகள் வேலுமணி, சிவக்குமாா், அன்பரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.