மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மாட்டுப் பண்ணையில் தீ விபத்து : 3 மாடுகள் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே மாட்டுப் பண்ணையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 மாடுகள் உயிரிழந்தன.

News image

பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 6:33 pm

ஆம்பூா் அருகே மாட்டுப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 மாடுகள் உயிரிழந்தன.

ஆம்பூா் ஏ-கஸ்பா காமராஜா் நகா் பகுதியில் பாா்த்திபன் என்பவா் மாட்டுப் பண்ணை நடத்தி வருகிறாா். மாட்டுக் கொட்டகையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடா்ந்து மாட்டுக் கொட்டகை முழுவதும் தீ பரவியது. தகவலின் பேரில் ஆம்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்து 10-க்கும் மேற்பட்ட மாடுகளை மீட்டனா்.

அதில் 3 மாடுகள் தீயில் கருகி உயிரிழந்தன.