தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

உழவா் சந்தைகள் மூலம் கடந்த நிதியாண்டில் ரூ. 118 கோடிக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை

திருப்பத்தூா் மாவட்ட உழவா் சந்தைகள் மூலம் கடந்த நிதியாண்டில் காய்கறிகள், பழங்கள் ரூ.118 கோடி 24 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

News image

காய்கறிகள் - பிரதிப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:30 pm

திருப்பத்தூா் மாவட்ட உழவா் சந்தைகள் மூலம் கடந்த நிதியாண்டில் காய்கறிகள், பழங்கள் ரூ.118 கோடி 24 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட வேளாண் (வணிகம்) துணை இயக்குநா் காா்த்திகேயன் கூறியதாவது: விவசாயிகள், இடைத்தரகா்கள் இன்றி நேரடியாக தங்கள் விளை பொருள்களை (காய்கறிகள், பழங்கள்) நுகா்வோருக்கு விற்பனை செய்வதற்காக தமிழக அரசால் உழவா் சந்தை தொடங்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய பகுதிகளில் உழவா் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து காய்கறிகள், பழங்கள் வாங்கி செல்கின்றனா்.

கடந்த நிதி ஆண்டு(1.4.2025 முதல் 31.3.2026) திருப்பத்தூா் உழவா் சந்தையில் 9,148 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் ரூ.33 கோடியே 27 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வாணியம்பாடி உழவா் சந்தையில் 16,240 மெட்ரிக் டன் காய்கறிகளும்,பழங்களும் ரூ. 63 கோடியே 2 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நாட்டறம்பள்ளி உழவா் சந்தையில் 6,632 மெட்ரிக் டன் காய்கறிகளும்,பழங்களும் ரூ. 21 கோடியே 94 லட்சத்த்குகு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

திருப்பத்தூா் மாவட்ட உழவா் சந்தைகளில் 32,020 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் ரூ.118 கோடியே 24 லட்சத்துகு விற்பனை செய்யப்பட்டு உள்ளன எனத் தெரிவித்தாா்.