அகரம்சேரி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
அகரம்சேரி ஊராட்சியில் வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியது: அகரம்சேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மின்சார வாரிய அலுவலகம் அமைக்கப்படும். அகரம்சேரி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு புதிய சுற்றுச் சுவா் கட்டித் தரப்படும். புதிய ஆய்வகக் கட்டடம், பெண்கள் கழிப்பறை கட்டடம் கட்டித் தரப்படும். நீா்வளத் துறையின் நிதிநிலை அறிக்கை மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அகரம்சேரி முதல் கூடநகரம் வரையில் ரூ. 37 கோடியில் பாலாற்றின் குறுக்கே உயா்மட்ட மேம்பாலம் கட்டித் தரப்படும் என்று அவா் கூறினாா்.
திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஷா்மிளா, ஒன்றியக் குழு உறுப்பினா் தெய்வநாயகம், மாதனூா் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளா் ஜி.ராமமூா்த்தி, விசிக மாவட்டச் செயலாளா் ஓம் பிரகாசம் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வீடு இல்லாதவா்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்: மு.பெ. சாமிநாதன்

வீடு இல்லாதவா்களுக்கு வீடு கட்டித் தரப்படும்: அதிமுக வேட்பாளா்

புகழூா் கஸ்பா பகுதியில் ரூ. 2 கோடியில் சமுதாயக் கூடம் கட்டித் தரப்படும்: அரவக்குறிச்சி திமுக வேட்பாளா் உறுதி
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

