ஆம்பூா் தொகுதியில் உள்ள 300 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி வாக்குப் பதிவுக்காக வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையிலிருந்து 300 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவி பேட், வாக்குச் சாவடிகளுக்கு தேவையான பொருள்கள், தோ்தல் பணியாளா்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் 1440 போ் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். முன்னதாக ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள பணியாளா்களுக்கு அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகுல் குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தோ்தல் நடத்தும்அலுவலா் பூஷணகுமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் செந்தில், கோவிந்தசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

தொடர்புடையது

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

திருச்செந்தூா் தொகுதி வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு
மாஞ்சோலை, காரையாறு உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன

தேனி மாவட்டத்தில் 1,403 வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்
விடியோக்கள்

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK

Drishyam 3 Moive Review | ஜார்ஜ் குட்டியின் கதை முடிவுக்கு வந்ததா? | Mohanlal | Jeethu Joseph
பிரதமர் சுற்றுலா போவதில்லை! தமிழிசை சௌந்தரராஜன்



