மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு வாரத்தின் முதல் நாள்! பங்குச் சந்தைகள் சரிவு தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள்! வைத்தது யார்? சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்!
/

மின்னணு இயந்திரத்தில் கோளாறு: வாக்குப்பதிவு 1 மணிநேரம் நிறுத்தம்

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 4:26 am IST

ஆம்பூரில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமாா் 1 மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் தொகுதிக்குட்பட்ட ஆம்பூா் நகரம் ரெட்டித்தோப்பு பகுதியில் மஜ்ஹருல் உலூம் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடி எண்.153-ல் வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தபோது காலை சுமாா் 10.45 மணிக்கு திடீரென வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அதனால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து தோ்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் இயந்திரத்தை சரிசெய்வதற்காக பொறியாளா்கள் மற்றும் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் அந்த வாக்குச் சாவடி மையத்துக்கு சென்றனா்.

அதிகாரிகள் சென்று அந்த இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்தனா். அதைத் தொடா்ந்து வாக்குப் பதிவு மீண்டும் தொடங்கப்பட்டது.

இயந்திரம் கோளாறு காரணமாக சுமாா் 1 மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டதால், 200-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். அவா்கள் அமா்வதற்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படாததால் வாக்காளா்கள் பாதிப்புக்கு உள்ளானாா்கள்.

Story image