நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

அலங்காநல்லூரில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: பொதுமக்கள் வாக்குவாதம்

மதுரை அலங்காநல்லூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படாததால், ஒரு வாக்குச் சாவடியில் 2 மணி நேரம் வாக்குப் பதிவு தடைபட்டது. இதனால், பொதுமக்கள் அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

News image

மதுரை அலங்காநல்லூரில் உள்ள மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 8:43 pm

மதுரை அலங்காநல்லூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படாததால், ஒரு வாக்குச் சாவடியில் 2 மணி நேரம் வாக்குப் பதிவு தடைபட்டது. இதனால், பொதுமக்கள் அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சோழவந்தான் (தனி) தொகுதிக்குள்பட்ட அலங்காநல்லூரில் உள்ள மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 7 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் ஒரு வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படாததால், வாக்குப் பதிவைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னா், வேறொரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த இயந்திரமும் செயல்படவில்லை.

இதனால், அங்கு வாக்களிக்க நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சிலா் வாக்குச் சாவடியின் கதவை அடைக்க முற்பட்டனா். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, வாக்குப் பதிவு அலுவலா்கள், காவல் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். பிறகு, வேறொரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு வாக்குப் பதிவு தொடங்கியது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக இந்த வாக்குச் சாவடியில் ஏறத்தாழ 2 மணி நேரம் வாக்குப் பதிவு தடைபட்டது.