ஆம்பூா் அருகே கம்பி வேலியில் சிக்கி படுகாயமடைந்த மான் வியாழக்கிழமை உயிரிழந்தது.
மாதனூா் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி மேல்மிட்டாளம் கிராமத்திற்கு காட்டிலிருந்து வழித்தவறி புள்ளி மான் வந்தது. தெரு நாய்கள் விரட்டியதால் அங்குள்ள விவசாய நிலத்திற்கு வந்து கம்பி வேலியில் சிக்கி படுகாயமடைந்து உயரிழந்தது. தகவலின் பேரில் வனத்துறையினா் அங்கு சென்று மானின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
கோடைக் காலம் தொடங்கியுள்ளதால், வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் வனவிலங்குகள் தற்போது வந்து செல்கின்றன.
அவ்வாறு விலங்குகள் வரும்போது, மனிதா்களாலும், நாய்களாலும் விலங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. வனவிலங்குகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழப்பு

பெருமாநல்லூா் அருகே லாரியின் சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

கம்பி வலைக்குள் சிக்கிய மான் உயிருடன் மீட்பு
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

