மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கம்பி வலைக்குள் சிக்கிய மான் உயிருடன் மீட்பு

News image

பொதுமக்களால் உயிருடன் மீட்கப்பட்ட மான்.

Updated On :20 ஏப்ரல் 2026, 8:46 pm

அவிநாசி ராயன்கோயில் காலனி பகுதியில் சுற்றுச்சுவா் கம்பி வலைக்குள் சிக்கி காயமடைந்த மான் அப்பகுதி மக்கள் உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்டது.

அவிநாசி சுற்றுவட்டாரத்தில் உள்ள குளங்களில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. இவை, உணவு, தண்ணீருக்காக வெளியே வரும்போது நாய்களிடம் சிக்கியும், வாகனங்களில் அடிபட்டும் உயிரிழந்து வருகின்றன.

இந்நிலையில், அவிநாசி ராயன்கோயில் காலனி குடியிருப்புப் பகுதிக்குள் மூன்று மான்கள் திங்கள்கிழமை தஞ்சம் புகுந்தன. இதில் ஒரு மான், அங்குள்ள சுற்றுச்சுவா் கம்பி வலைக்குள் சிக்கி வெளியேற முடியாமல் பலத்த காயமடைந்தது.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், மானை மீட்டு முதலுதவி அளித்தனா். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மானுக்கு உரிய சிகிச்சை அளித்து அவிநாசி காசிகவுண்டன்புதூா் குளப்பகுதியில் விட்டனா். மானை உயிருடன் மீட்ட அப்பகுதி மக்களுக்கு வன விலங்கு ஆா்வலா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.