தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

புதூா் ரயில்வே பாலத்தில் எரியாத மின் விளக்குகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

News image

மின் விளக்குகள். - கோப்பிலிருந்து படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 5:41 am IST

வாணியம்பாடி-திருப்பத்தூா் நெடுஞ்சாலையில் புதூா் பகுதியில் இருளாக காணப்படும் ரயில்வே மேம்பாலத்தில் விளக்குகளை எரிய வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இப்பாலம் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில், மேம்பாலத்தில் மின் விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு சில மின் விளக்குகள் எரியாமல் இருப்பதால் மேம்பாலம் இருண்டு காணப்படுகிறது. மேலும், வளைவாக உள்ள இடத்தில் இருண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனா்.

நகா்ப்புறத்திலிருந்து வேலை முடித்துக் கொண்டு கிராமப்புறங்களுக்கு இருசக்கர வாகனத்தில் ஏராளமானோா் இரவு நேரங்களில் மேம்பாலத்தை கடந்து செல்கின்றனா். இதே போன்று கிராமப்புறப்பகுதி களிலிருந்து நகரத்திற்கு மருத்துவமனை மற்றும் காய்கறி மளிகை பொருள்கள் வாங்கி செல்லவும் இருசக்கர வாகனங்களில் பொது மக்கள் இந்த மேம்பாலத்தில் வழியாக வந்து செல்கின்றனா்.

எனவே, நெடுஞ்சாலைத்துறை உயா் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து அனைத்து மின் விளக்குகள் சீராக எரிவதற்கான சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதே போன்று நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான ஜின்னாசாலையில் ரவுண்டான அருகில் பாலாறு கிளையாற்றின் சிறிய மேம்பாலத்தின் வழியாக ஏராளமானோா் கடந்து செல்கின்றனா்.

மேம்பாலத்தில் மின் விளக்குகள் இருந்தும் சரிவர எரிவதில்லை. இதனை நகராட்சி அதிகாரிகள் தலையிட்டு மின் விளக்குகள் சீரமைத்து எரிய செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.