தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

லாரி கவிழ்ந்து இளைஞா் மரணம்

நாட்டறம்பள்ளி அருகே சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 12:03 am IST

நாட்டறம்பள்ளி அருகே சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

பெங்களூா் அலங்காா் பகுதியைச் சோ்ந்த நாகேந்திரன் மகன் காா்த்திகேயன்(36). இவா் செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூரில் இருந்து சென்னைக்கு மினிலாரியில் பயணம் செய்தாா். மினி லாரியை ஓட்டுநா் உபேந்திரராவ் ஓட்டிசென்றாா்.

சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே மேல்மல்லப்பள்ளி பகுதியில் வந்த போது டயா் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த காா்த்திகேயன் நிகழ்விடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.